July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கல்வித்தந்தை காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா: மத்தூரில் காங்கிரஸார் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. டாக்டர் செல்லகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில செயலாளரும், முன்னாள் ஊத்தங்கரை சேர்மனுமான ஜே.எஸ். ஆறுமுகம் பங்கேற்றார்.

தனஜெயம் மற்றும் ஜமால் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ராமன், வினோத் குமார், சபாபதி, பைரோஸ் பாபு பாய், லோகநாதன், அஜ்முதின், அம்சா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.