July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கடைசிகுளம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

வந்தவாசி, ஜூலை 10:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கடைசிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ‘நாமும் சுற்றுச்சூழலும்’ விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஏ.லட்சுமிபாய் தலைமை தாங்கினார். எக்ஸ்னோரா மாவட்ட பொறுப்பாளர் மலர் சாதிக், ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் பெ.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி ஆசிரியை அனுசூயா வரவேற்றார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், மனநல மருத்துவர் பேராசிரியர் இரா.பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்று, நாமும் சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினர். மேலும் பள்ளியின் தூய்மை பயன்பாடுகளுக்காகவும், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து போடுவதற்காகவும், பிளாஸ்டிக் பக்கெட்டுகள் வழங்கப்பட்டது. இறுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.