- அறந்தாங்கி.
ஜுலை 10 புதுக்கோட்டை மாவட்டம்
ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஐந்தாவது நாள் அறிமுகப்பயிற்சியின் தொடர்ச்சியாக, தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு, கல்லூரித் திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராகப்பங்கேற்ற புதுக்கோட்டை சத்தியமங்கலம் ஸ்ரீவாஞ்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் எஸ்.வாசுகி, தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் து.சண்முகசுந்தரம், சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுக உரையாற்றினார்.
வணிக நிருவாகவியல் துறைத்தலைவர் முனைவர் மு. அன்பழகன், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கு.சீனிவாசன், ஆங்கிலத்துறைத்தலைவர் பேராசிரியர் அ. கணேசன், வரலாற்றுத்துறைத்தலைவர் முனைவர் ரா.பிரகதாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியில் செயற்படும் உள்ளக புகார்க்குழு உறுப்பினர் சீ.சுபாஷினி, வேலைவாய்ப்பு மைய அலுவலர் முனைவர் ரா.அபிராமி, தெருநாய்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் ந.ஜீவரத்தினம், ஏ.மகேஷ்குமார், க.முருகையா, சி.மாதவன் உள்ளிட்ட ஆங்கிலத்துறை விரிவுரையாளர்கள் மாணவர்களிடையே பேசினர்.
கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஆங்கிலத்துறை விரிவுரையாளர்கள் க.சிவனேசன், க.திவ்யா, நிருவாகவியல் துறை இரா.சூர்யா ஆகியோர் ஊக்கவுரை ஆற்றினர்.
முன்னதாக ஆங்கிலத்துறைத்தலைவர் பேராசிரியர் அ. கணேசன் அனைவரையும் வரவேற்றார்.நிறைவாக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் இரா.ப.நவீன்பாலாஜி நன்றி கூறினார். தமிழ்த்துறை விரிவுரையாளர் மு.பழனித்துரை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை விரிவுரையாளர்கள், அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் செய்திருந்தனர்.
செய்தியாளர் பழனிவேல்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்