July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,08/07/2026.

சேலம் ரயில்வே கோட்டம் சிறப்பு பரிசோதனை – ஒரே ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 301 பேருக்கு அபாரதம்.

சேலம் ரயில்வே கோட்டம்,(ஜூலை 5) இரவு, ஒரு சிறப்பு தீவிர பயணச்சீட்டு சோதனை நடவடிக்கையை நடத்தியதில், ஒரே ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 301 பயணிகளுக்கு அபராதம் விதித்தது.

ரயில்வே துறையில் ரயிலில் பயணிக்க மட்டும் இல்லாமல், ரயில்வே ஸ்டேஷன் உள்ளே நுழைவதற்கே ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் எடுக்க வேண்டிய சட்டம் உள்ளது. ஆனாலும் இதை பொருட்படுத்தாமல் செல்பவர்களை கண்டுபிடித்து அவ்வப்போது ரயில்வே அதிகாரிகள் அபராதம் விதிப்பது வழக்கம். அதேபோல் ரயிலில் பயணிக்கும் பயணிகளிடமும் டிப்கெட் பரிசோதனை நடத்தி டிக்கெட் இல்லாதவர்களுக்கு அபராதம் விதிப்பார்கள். அந்த வகையில், சேலம் ரயில்வே கேட்டத்தில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 301 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் ஒரு செய்திக்குறிப்பில் கோயம்புத்தூர் – சில்சார் வாராந்திர விரைவு ரயிலில் (ரயில் எண் 15627) நேற்று முன்தினம் இரவு ஒரு சிறப்பு தீவிர பயணச்சீட்டு சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து சேலத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்த சோதனையில், ரயிலில் இருந்த அனைத்து பயணிகளும் முழுமையாக சோதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னலால் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், சிரேஷ்ட கோட்ட வர்த்தக மேலாளர் ஒய். சரவணகுமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும், வர்த்தகத் துறையைச் சேர்ந்த சுமார் 16 குழு டிக்கெட் பரிசோதனைப் பணியாளர்கள் இந்த சிறப்புத் தீவிர டிக்கெட் பரிசோதனை இயக்கத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் அனுமதி இல்லாமல் பயணித்ததால், அங்கிருந்து பொதுப் பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர்.

மேலும், பயணச்சீட்டு இல்லாத மற்றும் அனுமதியற்ற பயணிகள் விதிகளின்படி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்கள் மற்றும் செல்லாத பயணச்சீட்டுகளை கொண்டு பயணம் செய்த 301 பேரிடமிருந்து அபராதமாக ரூ2.64 லட்சம் வசூலிக்கப்பட்டது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அங்கீகரிக்கப்படாத பயணிகள் பயணித்து, முன்பதிவு செய்த உண்மையான பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது குறித்து அதிகரித்து வரும் புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அங்கீகரிக்கப்படாத பயணிகள் தண்டிக்கப்படுவதையும், உண்மையாக முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் வசதியான பயணத்தை மேற்கொள்வதையும் உறுதி செய்வதற்காக, இதுபோன்ற தீவிர பயணச்சீட்டு சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்துவோம் என்று சேலம் கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.