385 மனுக்கள் வரப்பெற்ற நிலையில் மேல் நடவடிக்கைக்கு உத்தரவு..
ஈரோடு. ஜூலை. 07
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
வாரம் தோறும் திங்கள்கிழமை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று காலை பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை கொண்டு வந்து கொடுத்தனர்.
இவ்வாறு கொடுக்கப்பட்ட மனுக்கள் மொத்தம் 385 ஆகும்.
இந்த மனுக்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தார் சாலை, குடிநீர் பிரச்சனை, சாலை வசதி, இலவச வீட்டு மனை பட்டா, இலவச வீட்டு மனை, முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் என பலதரப்பட்ட கோரிக்கை மனுக்கள் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கொடுக்கப்பட்டது.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நல திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. அதேபோல் பல்வேறு துறைகள் சார்பிலும் நல திட்டங்கள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்சு. சாந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்