புதுச்சேரி, ஜூலை 6:
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் அலைன்ஸ் பிரான்சிஸ் (Alliance Française) இணைந்து நடத்திய ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றி விழா, நேற்று மாலை புதுச்சேரி அலைன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு, முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் தோழர் கு. பச்சையம்மாள் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொருளாளர் தோழர் பக்தவத்சலம் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் அலைன்ஸ் பிரான்சிஸ், புதுச்சேரியின் இயக்குநர் லோராண்ட் ஜாலிகூ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்வின் ஒரு பகுதியாக, மறைந்த திரைக்கதை மன்னன், இயக்குநர் பாக்கியராஜ் அவர்களுக்குப் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி உரையை முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைச் செயலாளர் தோழர் லெனின் பாரதி நிகழ்த்தினார்.
தொடர்ந்து, ‘ஹபீபி’ திரைப்படம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் லியாகத் அலி (அஞ்சுமன் நூலகம்), ஹேமாவதி (தலைவர், மு.எ.க.ச, நகரக்கிளை), சமூக ஆர்வலர் S. அன்வர் அலி மற்றும் நடிகர் பாண்டி ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டு, படத்தின் படைப்புத்திறன் மற்றும் சமூகப் பங்களிப்பு குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
திரைப்படத்தின் இயக்குநர் மீரா கதிரவன், ‘ஹபீபி’ படத்துடனான தனது பயண அனுபவங்களை விவரித்தார். நிகழ்வின் நிறைவாக, துணைச் செயலாளர் தோழர் மதுமிதா நன்றியுரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நகரக் கிளை, மண்ணாடிப்பட்டு கிளை, லாசுப்பேட்டை கிளை, பாகூர் கிளை மற்றும் மாணவர் கிளை நிர்வாகிகள் ஒருங்கிணைத்திருந்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்