July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கல்வி கற்க வயது தேவையில்லை: ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் பேச்சு

வந்தவாசி, ஜூலை 05:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் 10 ஆம் வகுப்பு நேரடி தனித்தேர்வு (ஜூலை) எழுத சிறப்பு பயிற்சி பெற்று வரும் 61 மாணவர்களுக்கு தேர்வுக் கூட ஹால்டிக்கெட் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் க.பூபாலன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் மஹாவீர் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஜவகர் சிறுவர் மன்றம் திட்ட ஒருங்கிணைப்பாளர் பெ.பார்த்திபன் பங்கேற்று, கல்விக்கு வயது தடை இல்லை. வாழ்நாள் முழுவதும் கல்வி கற்று மேன்மை அடையலாம் என்று வலியுறுத்தினார். மேலும் அனைவருக்கும் தேரவுக்கூட ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.