July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஆண் மயில் உயிருடன் மீட்பு

மணப்பாறை தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் இணைந்து துரித நடவடிக்கை

மணப்பாறை, ஜூலை 5:

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மொண்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொட்டப்பட்டி அடுத்த நரியம்பட்டி பகுதியில் தண்ணீர் இல்லாத சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண் மயில் ஒன்று தவறி விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கயிறு உதவியுடன் தீயணைப்பு வீரர் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கி, ஆண் மயிலை பாதுகாப்பாக மீட்டார்.

உயிருடன் மீட்கப்பட்ட ஆண் மயில் பின்னர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டு, இயற்கை வாழ்விடத்தில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால் அரிய உயிரினமான ஆண் மயில் காப்பாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.