புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஊழியர்கள் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிபுரியும் மெக்கானிக் ஒர்க் இன்ஸ்பெக்டர் மற்றும் பல்நோக்கு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பணி முடித்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், சீனியர் மெக்கானிக் மற்றும் மெக்கானிக் பதவிகளை ஒன்றாக இணைத்து மெக்கானிக்காக மாற்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அவர்களின் போராட்டத்திற்கு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, இன்று பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “பல ஆண்டுகளாகப் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டிப் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து இதே நிலை நீடிக்கும் ஆனால், அடுத்த கட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்” என்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்