திருச்சி. ஜுலை 1-
திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயா பள்ளியில் 2026 – 27 கல்வி ஆண்டுக்கான மாணவ மன்ற துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் அமிர்த வித்யாலயம் பள்ளியின் முதல்வர் திருமதி. முத்துலட்சுமி கலந்து கொண்டு இந்த கல்வியாண்டில் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அணி தலைவர், தலைவி, விளையாட்டு அணி தலைவர், தலைவி மற்றும் பல்வேறு அணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் திருமதி. உஷாராகவன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்க பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் வரவேற்புரை மற்றும் நன்றி உரை கூறினார்கள். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாணவர்கள் பள்ளியிலும் சமூகத்திலும் தலைமை பண்போடு மற்றும் ஒழுக்கத்தோடு சிறந்து விளங்க வேண்டும் என்று மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் எடுத்துக் கூறினார்கள். அதேபோல் இந்த ஆண்டு கல்வியாண்டில் பல்வேறு அணிகளின் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சிறப்பு விருந்தினர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் என சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்