July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

குறிஞ்சிப்பை வடக்கு தாங்கள் அம்மச்சார் அம்மன் கோவிலில் ஆனி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை வடக்கு தாங்கள் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அம்மச்சார் அம்மன் திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஆனி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அதிகாலை அம்மனுக்கு பால் தயிர் பன்னீர் தேன் இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அம்மனுக்கு பல மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்தனர் பெண் பக்தர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து திருவிளக்கு பூஜைகள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி 1008 முறை சங்கல்பம் செய்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பெண் பக்தர்களுக்கு ஜாக்கெட் பிட் வளையல் தாலி கயிறு குங்குமம் மஞ்சள் பூக்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தனது வேண்டுதல்களை முன்வைத்தும் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடனும் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அருள்மிகு அம்மச்சார் அம்மன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பில்
வருகின்ற ஆடி மாதம்13 ஆம் வருட ஆடி பெருவிழா அழைப்பிதழ் பக்தர்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.