June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம் பச்சப்பட்டி ஸ்ரீ செல்வகணபதி மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனத்தலைவர்வி.கே.பிரகாஷூக்கு சிறந்த சமூக சேவைக்கான டாக்டர் பட்டம்சேலம், ஜூன்.29-சேலம் பச்சப்பட்டி மெயின் ரோடு, துவக்கப்பள்ளி அருகில், 40- வது டிவிஷனில்ஸ்ரீ செல்வகணபதி மக்கள் சேவை அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. அதன் தலைவர் வி.கே.பிரகாஷ் பச்சப்பட்டியில் இருக்கும் ஊர் பொதுமக்களுக்கு திருமணஉதவித்தொகையும், இறந்தவர் இறுதி சடங்குக்கு நிதி நிதி உதவியும் கடந்த 12 வருடமாக வழங்கி வருகிறார். மற்றும் மாதத்தில் ஒரு நாள் சங்கடஹர சதுர்த்தி அன்று அன்னதானமும் வழங்கப்படுகிறது.மேலும் வருடத்தில்ஒரு நாள் தீபாவளி அன்று அப்பகுதி முதியோர்களுக்கும், சிறுவர்களுக்கும் நிதி உதவியும் கடந்த 20 வருடமாக வழங்கிக்கொண்டு வருகிறார். மற்றும் பொதுமக்களின் பொதுபிரச்சனைகளுக்கு முன்னின்று ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகிறார். தற்பொழுது ஒரு வருடமாய் சேலத்தில் உள்ள பெண்களுக்கு ஸ்ரீ செல்வகணபதி மக்கள் சேவை அறக்கட்டளை அலுவலகத்தில் இலவச தையல் பயிற்சி மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி கடந்த 2 வருடங்களாக வழங்கிக்கொண்டு வருகிறார். இவை அனைத்தையும் தன்னுடைய சொந்த செலவில் பொது மக்களுக்கு செய்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேற்கண்ட இவரதுசமுதாய பணிகளை பாராட்டும் வகையில் “சிறந்த சமூக சேவைக்கான டாக்டர் பட்டம்” – வழங்கும் விழா ஓசூரில் உள்ள டி.ஜி.ஐ. கிராண்ட் பார்சூனா ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர்.கே.ஏ‌.மனோகரன், டாக்டர் . கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள், ஆகியோர் கலந்து கொண்டு வி.கே. பிரகாஷூக்கு சிறந்த சமூக சேவைக்கான டாக்டர் பட்டத்தினை வழங்கினர். அப்போது கராத்தே உலக சாதனை படைத்த டாக்டர்.ஏ.பி.ஸ்ரீநாத், டாக்டர் . சுப்பிரமணியம், எஸ்.டி.சோம்பேகவுடா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதில் ஸ்ரீ செல்வகணபதி மக்கள் சேவை அறக்கட்டளை செயலாளர் பி.சிந்துஜா, பொருளாளர் ஏ.விஜய் மற்றும் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.