June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி நகரப்பகுதி முழுவதும் குப்பைகளை சரிவர வாரததால் நகரப்பகுதியில் உள்ள பிரதான சாலைகள் குப்பை மண்டி காட்சியளிப்பது வாடிக்கையாக உள்ளது. அதேபோல ஒவ்வொரு தொகுதிகளிலும் மக்கள் வசிக்கும் உட்புறசாலைகளிலும் குப்பை மண்டி துர்நாற்றம் வீசுகிறது. நகரப்பகுதியில் வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றிலிருந்து அதிகளவில் குப்பைகள் சேருகிறது. அதை உடனுக்குடன் அப்புறப்படுத்தாததால் அவை துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன் சாலைகளில் உள்ள வாய்க்கால்களில் சரிந்து கழிவுநீருடன் கலந்து சேரும், சகதியுமாக காட்சியளிப்பதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகளவில் கொசு உற்பத்தி ஏற்பட்டு டெங்கு, மலேரியா போன்ற வி~காய்ச்சல் பரவி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் நகரப்பகுதியில் உள்ள U Drain வாய்க்கால்கள் தூர்வாரபடாமல் குப்பைகள் மண்டி கிடப்பதால் மழை பெய்யும் நேரத்தில் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் செல்லாமல் சாலைகளில் மழைநீர் தேங்குவதுடன் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்து பொதுமக்களுக்கு பொருள்இழப்புகளை ஏற்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேநேரத்தில் புதுச்சேரிக்கு வரும் வெளிநாடு மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் அளவிற்கு கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் குப்பைகள் வீதியெங்கும் பரவி கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுசம்பந்தமாக நான் பலமுறை சம்பந்தப்பட்ட துறைகளான உள்ளாட்சி துறை இயக்குநர் மற்றும் புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு நேரிலும், கடிதம் மூலமும் தெரிவித்தும் எந்தவித முன்னெடுப்பும் இல்லாத நிலை உள்ளது. இந்த குப்பைகளை அகற்றும் துப்புரவு பணிக்காக அரசிடம் ஒப்பந்தம் செய்து இருக்கும் கிரீன் வாரியர் என்ற தனியார் நிறுவனம் குப்பை அகற்றுவதற்கு தகுதியற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனம் போதுமான பணியாளர்களை நியமிக்காமல் இருப்பதுடன், போதுமான வாகனங்கள் மற்றும் தகுந்த உபகரணங்கள் இல்லாமல் மிகச் சொற்ப பணியாளர்களை கொண்டு துப்புரவு பணிகளை மேற்கொள்வதால் குப்பை அகற்றும் பணி பெருமளவில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்நிறுவனம் துப்புரவு பணியாளர்களுக்கு உண்டான ஊதியத்தை சரியாக வழங்குவதில்லை என்று தெரிகிறது. இதனால் பணியாளர்கள் அடிக்கடி வேலைக்கு வராமல் நின்றுவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தால் நாங்கள் அந்த நிறுவனத்திற்கு பல லட்சம் ரூபாய் அபராதம் விதித்துக் இருக்கிறோம் என்று கூறுகிறார்களே தவிர நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த கிரீன் வாரியர் நிறுவனமே தொடர்ந்து இந்த துப்புரவு பணியை மேற்கொண்டால் புதுச்சேரியே குப்பை மேடாக காட்சியளிக்குமே தவிர எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆகையால் மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த தனியார் குப்பை அள்ளும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு தொகுதி வாரியாக குப்பை அள்ளுவதற்கான முறைகளை கையாண்டு குப்பை அகற்றும் பணிகளுக்கு டெண்டர் விட்டு ஒப்பந்தம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதையும் மீறி இதே நிலை தொடர்ந்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை திரட்டி தொடர்போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்…. ….என்றும் மக்கள் சேவையில்.G. நேரு(எ)குப்புசாமி MLA உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி தலைவர்:நேயம் மக்கள் கழகம் புதுச்சேரி. 1