April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக வாழ்வுரிமை கட்சி வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வ. வினோத் கண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, ஏப்ரல் மாதம் முதல் உணவுகளின் விலை 20% முதல் 30% வரை உயரக்கூடும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஆனால் அதற்கு மாறாக தற்போது வேலூர் பொறுத்த வரையில் ஆரியபவன், ஆர்யாஸ், அலங்கார் உள்ளிட்ட பல ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை பார்க்க முடிகிறது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாக கூடம். எனவே ஹோட்டல்களில் உயர்த்தி உள்ள விலைவாசி உயர்வை தமிழக அரசு அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து நியாயமான விலைகளை நிர்ணயம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp