February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் 19.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயலில் 8.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள யானைகள் பராமரிப்பு முகாம், 2.60 கோடி ரூபாய் செலவில் வடிமைக்கப்பட்டுள்ள மின்னணு வனஆவணக் காப்பக இணையதள சேவை ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து,
கோயம்புத்தூர் மாவட்டம் சாடிவயலில் 8.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள யானைகள் பராமரிப்பு முகாம் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் முக்கிய ஆவணங்கள், வரைபடங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களை ஆராய்ச்சியாளர்கள், வனத்துறையினர், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் பார்வையிடும் வகையில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தினால் தமிழ்நாடு வனக் காப்பகப் பதிவுகளின் சேமிப்பு மையமாக 2.60 கோடி ரூபாய் செலவில் வடிமைக்கப்பட்டுள்ள மின்னணு ஆவணக் காப்பக இணையதள சேவையினை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனப்படை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வனம் மற்றும் வனஉயிரின பாதுகாப்பு பணிகளுக்காக.315 ஸ்போர்ட்டிங் ரைஃபிள்கள்,9mm ஆட்டோ பிஸ்டல்கள் உள்ளிட்ட படைக்கலன்களை துணை வன பாதுகாவலர்,வனச் சரகர்,வனவர் மற்றும் வனக் காப்பாளர்களுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பாராளுமன்ற உறுப்பினர்கள் முனைவர் கணபதி ப.ராஜ்குமார், க.ஈஸ்வரசாமி, சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில் பாலாஜி, தமிழ்நாடு தூய்மை பணியாளர் வாரியத் தலைவர்
திப்பம்பட்டி ஆறுசாமி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹூ,மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர், மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன்,முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர்
ஸ்ரீனிவாஸ் ரா. ரெட்டி,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வனத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp