February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

22 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கோரி போராடும் நெடுமானூர் பட்டியலின மக்கள் – நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு

சங்கராபுரம், பிப்,28

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நெடுமானூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பல ஆண்டுகளாக நிலமின்றி கடுமையான நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் தங்கி வாழும் சூழ்நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கிராம மக்கள் சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் வைரக்கண்ணனிடம் மனு அளித்துள்ளனர்.

கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக பலமுறை அரசுத் துறைகளை அணுகியும், நிலமதிப்பாய்வு அல்லது நிரந்தர தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நிலமின்மையின் காரணமாக அரசின் பல நலத்திட்டங்களையும் முழுமையாக பெற முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் உடனடி துறைத்தரப்பு ஆய்வு நடத்தி, தகுதியான குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், 22 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் தீர்வு கிடைக்காத நிலையில், இந்த முறைவும் அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பது குறித்து கிராம மக்கள் ஒருமித்த முடிவுக்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.

அரசு அதிகாரிகள் விரைந்து தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது அப்பகுதி அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Facebook
YouTube
Instagram
WhatsApp