July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி நகராட்சி மூலம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ்16 லட்சத்து 41 ஆயிரத்து 423 ரூபாய் மதிப்பீட்டில் வாணரப்பேட்டை ,சித்தி விநாயகர் கோவில் தெரு மற்றும் உள் தெருக்களுக்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை சட்டப்பேரவைத் தலைவரும், உப்பளம் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் அவர்கள் இன்று பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் யுவராஜ்,இளநிலை பொறியாளர் சண்முகசுந்தரம், ஆய்வாளர் ரவி, ஊர் பிரமுகர்கள் ஜெயராமன், குமார் விட்டல், சேகர் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.