தஞ்சாவூர் நவ 13.
தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற பூண்டி.வீரய்யா வாண்டையார் நினைவு புஷ்பம் கல்லூரி நிறைய நிபுணர்களையும் கல்வியாளர்களையும் உருவாக்கிய பெருமை அதற்கு உண்டு.
மத்திய மாநில அரசுகளின் பணியாற்றும் நிறைய அலுவலர்கள் கல்லூரியில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே மாணவர்களுக்கான சிறப்புரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரியின் எம்பிஏ துறையில்,
முன்னாள் இயக்குநரும் முதல்வருமான டாக்டர் எத்திராஜ்.
வேலைவாய்ப்புள்ள பட்டதாரியாக எப்படி உருவெடுப்பது
என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார்.
இந்நிகழ்வில் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.
மாணவர்களின் சிந்தனை வளத்தை விரிவுபடுத்தி, தொழில் உலகில் தங்களைத் தயார்படுத்தும் நோக்கில் நடைபெற்ற
இந்த நிகழ்ச்சி மிகுந்த பயனளிக்கக் கூடியதாக அமைந்தது.
நிகழ்வின் தொடக்கத்தில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மணிராஜ் வரவேற்புரையாற்றினார்.
இயக்குநர் டாக்டர் ஜெகன் நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
துணை முதல்வர், தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் மற்றும் புலத்தலைவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தஞ்சை மாவட்ட செய்தியாளர்
மா.மதிவதனன்9047360263.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..