June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வீரபாண்டிய கட்டபொம்மன்267வதுபிறந்த நாள் விழாஇளைஞர் அணி சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது!!


ஜனவரி- 04

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே சுதந்திர போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 267 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி சார்பில் அமைதிப் பேரணி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்புகள், மரக்கன்றுகள் வழங்கியும் சிறப்பிக்கப்பட்டது.
இந்த விழாவினை திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மு.பெ. சாமிநாதன். ஈரோடு மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் ஆகியோர் விழாவினை துவக்கி வைத்து மாவீரன் வீரபாண்டி கட்டபொம்மன் வாழ்க்கை வரலாற்று சிறப்புமிக்க திரைப்படம் வீரபாண்டி கட்டபொம்மன் வசனத்தை உரையாற்றி இளைஞர்களுக்கு விழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சங்கர் சாமி வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி கௌஷிக் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடித்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய செயலாளர் மொரட்டு பாளையம் பிரபு,
அரவிந்த்,கௌதம் ரவி,உள்ளிட்ட கழக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.