வந்தவாசி, ஜூன் 01:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ரெட் கிராஸ் சங்க கிளை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பாலாம்பாள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புகையிலை பயன்பாடுகளால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இது வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 80 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்றைய சூழலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதைப் பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன், சங்க நிர்வாகிகள் கு.சதானந்தன், க.வாசு, மலர் சாதிக் ஆகியோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர். மேலும் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக, உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் ஆசிரியர் மகாவீர் நன்றி கூறினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்