August 25, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பிறந்தநாள் – அமைப்பாளர் இரா. சிவா வாழ்த்து!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி மேனாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் திரு. இரா. சிவா அவர்கள், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அப்போது, மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. தங்கவேலு, தொகுதிச் செயலாளர் திரு. சக்திவேல், இந்திரா நகர் பசிபிக் சங்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.