மணப்பாறை சட்ட மன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆர் கதிரவனுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த தவெ க வினர்..
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக ஆர் கதிரவன் அவர்களை நேற்று சென்னை நூங்கம் பாக்கம் தனியார் விடுதியில் 234 தொகுதி வேட்பாளர்களை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவித்தார்.




இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து ரயில் மூலம் மணப்பாறை தொகுதிக்கு வருகை தந்த தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆர். கதிரவனுக்கு கட்சியினர் பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க விசில் ஊதி ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அதன் பின்னர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக காமராஜர் சிலை வரை சென்று பின்னர் மஸ்தான் தெருவில் உள்ள த.வெ க மாவட்ட அலுவலம் வரை உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் வருகை தந்த வேட்பாளர் கதிரவனுக்கு மணப்பாறை நகர த வெக சார்பில் ஆரன்ச் பழம் மாலை அணிவித்தும் கேரளா சென்டை மேளம் முழங்க பல்லாயிரகணக்கான மக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
இதில் மணப்பாறை வையம்பட்டி மருங்காபுரி துவரங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

More Stories
குறிஞ்சிப்பை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிலைகள் ஊர்வலம்
புதுச்சேரியில் சங்கமம்: பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நெட்வொர்க் அசோசியேஷன் மாநாடு!