வந்தவாசி, ஜன 31:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மகாத்மா காந்தியின் 79 ஆவது நினைவு தினத்தையொட்டி ‘என்றும் மகாத்மா’ பேச்சரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் பெ.பார்த்திபன், ஆசிரியர் மஹாவீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சா.இரா.மணி பங்கேற்று என்றும் மகாத்மா என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பிறகு காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இறுதியில் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் மத நல்லிணக்க உறுதிமொழியை ஏற்றனர்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..