July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா ஈரோட்டில் கொண்டாடப்பட்டது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானாவில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திரு உருவ சிலைக்கு, தமிழக வெற்றி கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த மோகன் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் ஹக்கீம், இளைஞர் அணி நிர்வாகிகள் பிரகாஷ், ஹரிவராசன் மற்றும் நிர்வாகிகள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.