புதுச்சேரி, ஜன. 02:
புதுச்சேரி கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் விதமாக, கதிர்காமம் கனகன் ஏரியின் நடுமதகு வாய்க்கால் முதல் பாஷ் மருத்துவமனை வரை கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.
தொடக்கம்: புதுச்சேரி மாநில முதலமைச்சர் மாண்புமிகு திரு. N. ரங்கசாமி அவர்கள் தலைமை தாங்கி, கட்டுமானப் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
முன்னிலை: கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. K.S.P. ரமேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இத்திட்டம் சுமார் ரூ. 1,20,13,746/- (ஒரு கோடியே இருபது லட்சத்து பதிமூன்றாயிரத்து எழுநூற்று நாற்பத்தி ஆறு ரூபாய்) மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் திரு. K. வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் திரு. R. சுந்தரமூர்த்தி, நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் திரு. B. ராஜ்குமார், உதவி பொறியாளர் திரு. R. ஜாய் பிரகாசம் மற்றும் இளநிலை பொறியாளர் திரு. M. சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் ஒப்பந்ததாரர் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நீர்ப்பாசனப் பிரிவு வாயிலாக மேற்கொள்ளப்படும் இந்த வாய்க்கால் கட்டுமானப் பணிகளை 3 மாத காலத்திற்குள் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.