February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

​புதுச்சேரி: ராஜ் பவன் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா!

​புதுச்சேரி, பிப். 02:

புதுச்சேரி ராஜ் பவன் தொகுதி வேட்பாளர் விக்னேஷ் கண்ணன், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது புதிய தேர்தல் அலுவலகத்தைத் திறந்துள்ளார்.

​புதுச்சேரி செட்டித் தெருவில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் அலுவலகத்தை, முன்னாள் எம்.பி. கண்ணனின் மனைவியும், வேட்பாளரின் தாயாருமான சாந்தி கண்ணன் அவர்கள் குத்துவிளக்கேற்றி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
​விழாவின் ஒரு பகுதியாக, மறைந்த மக்கள் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கண்ணன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
​இந்நிகழ்ச்சியில் ராஜ் பவன் தொகுதியைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
​முன்னாள் எம்.பி. கண்ணன் அவர்களின் மகனான விக்னேஷ் கண்ணன், இந்தத் தேர்தலில் ராஜ் பவன் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
YouTube
Instagram
WhatsApp