புதுச்சேரி:
லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) மாநில மகளிர் அணி சார்பில் தைப்பொங்கல் திருவிழா, பரிசளிப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமை தாங்கி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளையும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளையும் வழங்கினார்.
மாநில மகளிர் அணி தலைவி IGV. பிரபாவதி வீரராகு விழாவிற்குத் தலைமை தாங்கினார். உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M. சிவசங்கர் மற்றும் திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் P. அங்காளன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் பொதுமக்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்குப் பின்வரும் பரிசுகள் வழங்கப்பட்டது,
முதல் பரிசு: பிரிட்ஜ் (Fridge)
இரண்டாம் பரிசு: 32 இன்ச் கலர் டிவி (LED TV)
மூன்றாம் பரிசு: வாஷிங் மெஷின் (Washing Machine)
பட்டுப் புடவை
மேலும், சுமார் 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள உள்ளனர்.

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.