புதுக்கோட்டை மே 28
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட நாய் பள்ளம் பகுதியில் பாஸ்கர் என்பவர் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குடோன் வைத்துள்ளார் இவர் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென்று அவரது குடோனில் உள்ள ஒரு பக்கத்தில் தீ பிடித்தது தீ மல மல என பரவி கடை முழுவதுமாக பரவியது
தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு மூன்று தீயணைப்பு வண்டிகளில் 15க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினர் மேலும் ஜேசிபி இயந்திரம் கொண்டுவரப்பட்டு அவற்றின் மூலமாக பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கழிவுகள் அகற்றப்பட்டு தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்
இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
சம்பவ இடத்தை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா பார்வையிட்டு தீயணைப்பு வீரர்களிடம் ஆலோசனை செய்து தீயை விரைந்து அனைப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுத்தார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்