வந்தவாசி, ஜன 04:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளூர் கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் பங்கேற்று புதிய கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மேலும் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி சிறப்புரை ஆற்றினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பிடிஓ ஏ.பி.வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் ஆரியாத்தூர் பெருமாள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோபு சுமதி, திமுக பொறுப்பாளர்கள் மதன் குமார், கிஷோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்