கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பி.சி., – எம்.பி.சி., சீர்மரபினர் நல மாணவ, மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம். இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்-பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்ம-ரபினர் நல மாணவர், மாணவியருக்கு விடுதிகள் உள்ளன. அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு, 21 விடுதிகளும், மாணவியருக்கு, 14 விடுதிகள், கல்-லுாரி மாணவர்களுக்கு, 6, மாணவியருக்கு, 6 என மொத்தம், 47 விடுதிகள் உள்ளன. பள்ளி விடுதி-களில், 4ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கும், கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவியர் சேரலாம்.மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வச-தியும், 4ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, 4 இணை சீரு-டைகள் வழங்கப்படும். 10ம் வகுப்பு மற்றும், 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்-வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு நீட், ஜெ.இ.இ., நுழைவுத் தேர்வுக்கான வினா வங்கி நுால்கள், சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். இதில் சேர, பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
பி.சி., – எம்.பி.சி., சீர்மரபினர் விடுதிகளில் சேர அழைப்பு

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.