இலஞ்சத்தில் மிதக்கின்ற புதுச்சேரி தாசில்தார் அலுவலகங்கள்.
கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் கடும் கண்டனம்.
புதுச்சேரியில் தாசில்தார் அலுவலகத்தில் பணத்திற்கு பிணத்தைக் கூட தின்னுகின்ற பிணந்தின்னிகள்!
கொளுத்துகின்ற கொடுமையான கதிரவனின் வெப்பத்தில் வாக்களித்த மக்கள் வரிசையில் காத்திருப்பு!
அனைத்து ஆவணங்களும் கைகளில் இருந்தாலும் கயவர்கள் இலஞ்சத்திற்காக அலைய விடுகின்ற கொடூர அரக்கர்கள்!
தனது சாதிப் பார்த்து பணி செய்கின்ற சவப் பிண்டங்கள்!
அரசியல் தரகர்களுக்கு தடையில்லாமல் தாலுக்கா அலுவலகத்தில் கையொப்பம்!
ஓட்டுக்குப் பணம் பெற்றதால் ஓட்டாண்டிகளாக தினம் தவிக்கின்ற மக்கள்!
மதிகெட்ட, மானங்கெட்ட மக்களாட்சி அதற்கு இதுவெல்லாம் சாட்சி! இலஞ்சம் பெறுகின்றவனின் கைகளை உடைக்காத வரை, நடுத்தெருவில் ஆடைகளைக் களைந்து உதைக்காத வரை, திருந்தாத மக்களின் வரிப்பணத்தில் வருமானம் ஈட்டி மக்களுக்காகப் பணி செய்கின்ற அலுவலகப் பணியாளர்கள்!
ஒரு அலுவலகத்தில் ஒரு திருடன் கையூட்டுப் பெறுகின்றான் என்றால், அதே அலுவலகத்தில் கையூட்டுப் பெறாதவரும், கண்டும் காணாமலும் தவறுகளைக் களையாமல் கடந்து செல்பவரும், உடன் துணை போகின்ற திருடர்களே.
வேடிக்கைப் பார்க்கின்ற அரசின் நடவடிக்கையை கடந்து, கையும் களவுமாகப் பிடித்து மக்கள் மன்றத்தில் மண்டியிட வைப்போம்.
கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம்
நிறுவனர்
இரா.இராஜா
9500451569.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.