திருச்சி. ஆக 25-
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 183 வது விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், இணை முதல்வர் முனைவர் த.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம் வரவேற்புரையாற்றி, சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.
மத்திய மண்டலக் காவல்துறை தலைவர் வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து கல்லூரியின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அனைத்துத்துறை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றினார்.
கௌரவ விருந்தினராக திருச்சி சுங்க வரித்துறைக் கூடுதல் ஆணையரும் தூய வளனார் கல்லூரியின் முன்னாள் மாணவருமான கே.விஜயகிருஷ்ண வேலவன் பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையில் பல நாள் கல்லூரியில் தனக்கு கிடைத்த அனுபவங்களை வாய்ப்புகளை மேற்கோள்காட்டி தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள், பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான சிறப்பு போட்டிகளும் நடைபெற்றன.
உடற்கல்வி இயக்குனர் பிரேம் எட்வின், உதவி உடற்கல்வி இயக்குநர் எஸ்.ரெனில்டன் பிரீஸ் உள்ளிட்டோர் பரிசு பெற்ற மாணவர்களின் பெயர்களை வாசிக்க விருந்தினர்கள் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர். நிறைவாக விளையாட்டுத்துறை இயக்குனரும், துணை முதல்வருமான அருள்முனைவர் அருள்ஒளி நன்றியுரையாற்றினார்.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…