February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சியில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஓய்வூதியர் தின விழா :

திருச்சி டிச 17-

திருச்சி மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஓய்வூதிய தின விழா திருச்சி மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகர தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் பூபதி வரவேற்றார் எஸ்சிடிசி பொதுச் செயலாளர் தங்கராசு தொடக்க உரையாற்றினார்.மண்டல தலைவர் சேகர், மாநில துணை செயலாளர் சின்னசாமி ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள்.நிகழ்ச்சியில் நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்த வேண்டும். 2024 ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வு கால பணி பலன்களை உடனே வழங்க வேண்டும்.குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வைத்தனர். முடிவில் மண்டல பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp