ராய வேலூரில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் விஜய் பாலாஜி சர்ச்சை பேச்சு…
தொடர்ந்து சர்ச்சை பேச்சுகளை பேசி வரும் அமைச்சர் மீது ஆளுநரிடம் புகார் தெரிவிக்க கோரிக்கை…
ஈரோடு. ஜூலை 08
ராய வேலூரில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை குப்பைத் தொட்டியில் போட்டாச்சு என கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி பேசிய சர்ச்சை பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதில் காங்கிரஸ், விசிக, ஐ யு எம் எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்று சுமார் 50 நாட்கள் கடந்துள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும்தவெக கட்சியினர் மீது பல்வேறு சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
அதோடு இந்த 50 நாட்கள் ஆட்சியில் 100 பாலியல் வன்கொடுமை செயல்களும், இருபதுக்கும் மேற்பட்ட கொலைகளும் நடந்து வருவதோடு தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்சி வருகின்றனர்.
அதோடு விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் என்று இப்படி ஒரு சூழ்நிலை இருக்கும் நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ள அவரது கட்சியை சேர்ந்த சில அமைச்சர்களின் தொடர் சர்ச்சை பேச்சால் அரசுக்கு மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் தலெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் பாலாஜி தற்போது தமிழக கைத்தறித்துறை அமைச்சர் பதவி வகித்து வருகிறார்.
இவர் தொடர்ந்து பொது இடங்களில் பேசும்போது பல சர்ச்சைக்குரிய பேச்சுகளை பேசி வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.
சமீபத்தில் இவர் ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசும்போது, தமிழக மக்கள் எதிர்க்கட்சிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களுக்கு ஓட்டு போட்டு உள்ளார்கள்.
அதன்படி பார்த்தால் தமிழக மக்கள் லஞ்சம் வாங்கிய ஒரு ஊழல் வாழ்த்துக்கள் என்று பேசி சர்ச்சையில் சிக்கி இருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் விஜய் பாலாஜி ராய வேலூர் மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராகவும் இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அந்த மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
20 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 2000 பேருக்கு அந்த விழாவில் பல்வேறு நலத்திட்டங்களையும் அமைச்சர் விஜய் பாலாஜி வழங்கினார்.
இந்த விழாவில் பெண்கள் பெரும் அளவில் கலந்து கொண்டு இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பல வயதான பெண்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். போலீசார் எவ்வளவு வேண்டும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் அந்தப் பகுதியில், சாலை வழியாக தனது கார் மூலம் ராய வேலூர் தொகுதி திமுக எம்பி கதிர் ஆனந்த் வந்துள்ளார். அவர் காரில் வருவதைப் பார்த்த நல திட்ட விழாவிற்கு வந்திருந்த பலரும் எழுந்து நின்று அவரின் பார்த்தபோது, கோபமடைந்த விழா மேடையில் இருந்த அமைச்சர் விஜய் பாலாஜி மைக்கை கையில் எடுத்து, அப்படியே அனைவரும் அமருங்கள் அங்கே போவது நீங்கள் தூக்கி போட்ட குப்பை என்று எம்பி கதிர் ஆனந்தை சுட்டிக்காட்டி பேசியதும், தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அனைவரையும் குப்பைத் தொட்டியில் தூக்கி போட்டாச்சு என்று பேசியதும் கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜியின் இந்த பேச்சு தமிழ்நாடு முழுவதும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இது போன்ற அமைச்சர்களின் தொடர் சர்ச்சை பேச்சால், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பெரும் தலைவலியாக உள்ளது என பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும் அமைச்சர் விஜய் பாலாஜி போன்ற அமைச்சர்களின் அநாகரீகமான பேச்சை கண்டித்து ஆளுநரிடம் மனு கொடுக்கவும் எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எது எப்படியோ அமைச்சர்களின் இந்த பேச்சால் முதலமைச்சர் விஜய்க்கு கெட்ட பெயர் ஏற்படுவது நிச்சயம் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்