புதுச்சேரி:
புதுச்சேரி யூனியன் பிரதேசம், அரியாங்குப்பம் கொம்யூன், மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டோல்கேட் கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க, புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை இன்று (02.02.2026) நடைபெற்றது.
டோல்கேட் கிராமத்தில் உள்ள பச்சைவாழி அம்மன் கோவில் அருகில் உள்ள அரசு நிலம்.
பொதுப்பணித்துறை மூலம் சுமார் ₹24.00 லட்சம் மதிப்பீட்டில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதன் மூலம் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 2000 பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
புதுச்சேரி முதலமைச்சர் திரு. N.ரங்கசாமி அவர்களின் தலைமையில், பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. K.லட்சுமிநாராயணன் அவர்களின் முன்னிலையில், மணவெளி சட்டமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான திரு. R.செல்வம் அவர்கள் பூமி பூஜை செய்து பணிகளைத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் திரு. K.வீரசெல்வம், கண்காணிப்புப் பொறியாளர் திரு. R.சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் திரு. S.பக்தவச்சலம், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், ஊர் பொதுமக்கள் திரளாக வந்து சிறப்பித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்