சேலம்,ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்த உயர் மின்னழுத்த கம்பிகளால் பரபரப்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை வாகன ஓட்டிகள் சுதாரித்துக் கொண்டு வாகனங்களை முன்கூட்டியே சாலையிலே நிறுத்தியதால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையில் கடந்து சென்று வரும் நிலையில், அப்பம்மா சமுத்திரம் பகுதியில் திடீரென உயர் மின்னழுத்த கம்பிகள் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டுநர்கள் நல்வாய்ப்பாக சுதாரித்துக் கொண்டு சாலையிலே வாகனத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் அடிப்படையில் மின்வாரிய துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, அப்பம்ம சமுத்திரம், பனமரத்துப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!