282 மனுக்கள் வரப்பட்ட நிலையில் மேல் நடவடிக்கைக்கு உத்தரவு…
ஈரோடு. ஜூன். 09
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 282 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், மேல் நடவடிக்கைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
வாரம் தோறும் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பொதுமக்களுக்கான மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்தார்.
இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்து தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
இதில் கலைஞரின் உரிமை தொகை, விதவைகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான நல திட்ட உதவிகள் கூறுகள், மற்றும் தங்கள் பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்சினை, சாலை வசதி மேம்பாடு, தெருவிளக்கு மற்றும் சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் கந்தசாமி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் பல்வேறு துறைகள் சார்பாக பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

More Stories
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.