அரசு ஊழியர்களுக்கு லாபம் புதிய ஓய்வூதிய திட்டம்? பணபலன் தரும் பழைய பென்ஷன் எங்கே?
சேலம்:திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.. அப்போது புதிய ஓய்வூதியம் குறித்து எடப்பாடி சொல்லி உள்ள கருத்துக்கள், பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
ஒவ்வொரு பொங்கல் திருநாள் அன்றும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஒவ்வொரு தொகுதியாக சென்று பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையி நேற்றைய தினமும் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.. அப்போது “எங்கள் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, இன்னும் சில கட்சிகள் சேரப்போகின்றன. இது வெற்றிக் கூட்டணி, நம் கூட்டணி வரும் தேர்தலில் ஆட்சியமைக்கும், அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
புதிய கட்சிகள் அதிமுக கூட்டணியில்
அதிமுக உழைப்பாளர்கள் நிறைந்த கட்சி, தொண்டர்கள் நிறைந்த கட்சி. பாஜக 3-வது முறையாக நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வலிமையான ஆட்சி மத்தியில் நடக்கிறது. பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி நம்மோடு இணைந்திருக்கிறார்.
வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருக்கிறதா வெளியேறுகிறதா என தெரியவில்லை.
அதிமுக தலைமையில் பலம் பொருந்திய கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிற காங்கிரஸ் கை நழுவி போகப்போகிறது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா என்ற கேள்வி வந்துவிட்டது, அதிமுகவை பொறுத்தவரை பலம் வாய்ந்த கூட்டணி. தேர்தல் நேரத்தில் திமுகவை வீழ்த்துவோம். எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது.
அரசு ஊழியர்கள்
திறமையற்ற முதல்வர் இருக்கிற காரணத்தினால் மக்கள் நிம்மதியாக இல்லை. அரசு பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் ஆகியோரின் போராட்டங்கள் இல்லாத நாளே இல்லை. ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்கிற நிலை வந்துவிட்டது.
விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் அதிமுக ஆட்சியில் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டது, விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தோம், இந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு முறையாக கடன் கிடைப்பதில்லை. நமது ஆட்சியில் வறட்சி நிவாரணம் கொடுத்தோம், இழப்பீடு தொகை கொடுத்தோம்.
திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்றெல்லாம் சாடினார்..
புதிய ஓய்வூதிய திட்டம்
இதையடுத்து புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு அவர், “இந்த ஓய்வூதிய திட்டமே நாடகம். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்த திட்டத்தை அப்படியே பூசி ஊழியர்களை நம்பவைக்கிற மாதிரி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். இதில் புதிதாக ஏதும் இல்லை.
ஒரு சில மாற்றங்களை மட்டும் செய்திருக்கிறார்கள். அதில் பிரைஸ் இண்டெக்ஸ் என்று இருக்கிறது. இதில் அகவிலைப்படி என்று இருக்கிறது. அதுதான் மாற்றம் வேறு எதுவுமே கிடையாது.
பழைய ஓய்வூதிய திட்டம்
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தைத்தான் அரசு ஊழியர்கள் கேட்கிறார்கள். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் பங்களிப்பு இல்லை. இப்போது திமுக அரசு இன்றைய தினம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் பங்களிப்பு இருக்கிறது. இதில் என்ன புதிதாக மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்?
அரசு ஊழியர்கள் கேட்ட கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்றவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டபடி சில சங்கங்களை சரிக்கட்டி ஆதரவு பெற்றதாக எனக்கு தெரிகிறது. பெரும்பாலான அரசு ஊழியர்கள் இதை ஏற்கவில்லை. அதை நான் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன். ||
எது நடக்குமோ அதைத்தான் சொல்வோம்
அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வாய்ப்பு உள்ளதா? என்று கேட்கிறீர்கள்.. அதையெல்லாம் கால சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி முடிவு எடுக்கப்படும். எங்களை பொறுத்தவரை எது நடக்குமோ அதைத்தான் சொல்லுவோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு. திமுகவைப் பொறுத்தவரை ஓட்டுக்காக ஆட்சி செய்கிறார்கள்” என்றார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!