தமிழகத்தில் அனைத்து மகளிர்களுக்கும் இலவச பேருந்து பயணம் குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சேலம் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நடைபெற்ற மக்களுக்கான மருத்துவ முகாமை துவக்கி வைத்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
’’தமிழகத்தில் அனைத்துப் பேருந்துகளிலும் மகளிர் இலவச பேருந்து பயணம் திட்டம் எப்பொழுது துவங்கும் என்ற கேள்விக்கு, முதல்வர் விரைவாக கொண்டு வருவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. முதல்வர் விரைவில் அறிவிப்பார்.
போக்குவரத்துத் துறையில் வருவாய் பெருக்குவதற்கு செயல்திட்டங்கள் வகுத்து ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வகையிலும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும் என்பதற்காக அனைத்தும் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும்.
குக்கிராமங்களையும் , மாநகரையும் இணைக்க வேண்டும்
தமிழக முதல்வர் சொன்ன முதல் வார்த்தையே குக்கிராமங்களையும் , மாநகரையும் இணைக்க வேண்டும் என்பதுதான் முதல் கொள்கையாக வைத்துள்ளார்…இணைப்பு இல்லை என்பதே இருக்கவே கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் இனி ஏசி பேருந்தில் பயணிக்க வேண்டும்
அரசு பேருந்தில் முதல்வர் பயணித்தபோது, அனைத்து மக்களும் ஏசி பேருந்தில் பயணிக்க வேண்டும் என்று கூறினார். இனிவரும் காலங்களில் ஏசி பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் இனி ஏசி பேருந்தில் பயணிக்க வேண்டும் என்றும் முதல்வர் விரும்புகிறார். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மக்கள் கூட்டம் அதிகளவில் வரும் நிலையில் அவர்களுக்கு விரைவாக மருத்துவ சிகிச்சை அளிக்க என்னென்ன செய்ய முடியுமோ அவை அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’.
இவ்வாறு அமைச்சர் பார்த்திபன் தெரிவித்தார்.

More Stories
மணப்பாறை அருகே டிஎன்பிஎல் ஒப்பந்த ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டம்:
திருச்சியில்
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்