வந்தவாசி, பிப் 24:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அன்னை சத்யா மகளிர் தையல் கூட்டுறவு சங்க கட்டிடத்தில் தமிழக அரசின் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகள் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் பயிற்சி முகாம் நடைபெற்றது. சங்க கணக்காளர் துரைமுருகன் வரவேற்றார். செய்யாறு சட்டப் பணிகள் குழு துணை ஆர்வலர்கள் மலர் சாதிக், இரா.பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சமூக நல விரிவாக்க அலுவலர் ஜீவா பெண்களுக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார். வட்ட சட்ட பணிகள் குழு மூத்த வழக்கறிஞர் சா.இரா.மணி பங்கேற்று, பெண் குழந்தைகள் பாதுகாப்பதற்கான சட்டங்கள் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும், போக்சோ சட்டம், பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம். வரதட்சணை ஒழிப்பு, கருக்கலைப்பு, குழந்தைத் திருமணத்தடை சட்டங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார். இறுதியில் மகளிர் ஊர் நல அலுவலர் ரூபாவதி நன்றி கூறினார்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..