சங்கராபுரம் டிச 15
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் (13.12.2025) அன்று நடைபெற்ற மாபெரும் மக்கள் நீதிமன்றமான லோக் அதாலத்தில் சமரச முறையில் சுமார் 120 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ஒரு கோடியே 79 லட்சம் 77,793 தொகை வசூலாகி உரிய நபர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது.
இந்த மக்கள் மன்றத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியிருந்த ஒரு தம்பதி, நீதிபதிகள் மற்றும் நீதித்துறை நடுவர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைகளின் மூலம் மீண்டும் சேர்ந்து வாழ ஒத்துக் கொண்டு ஒன்றாக சென்றது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. குடும்பங்கள் சிதைவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் எடுத்த மனிதநேயமான முயற்சி அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது.
பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த காசோலை வழக்குகள், குடும்பத் தகராறு, விபத்து இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஒரே நாளில் amicable settlement மூலம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் பொதுமக்கள் நேரம், செலவு மற்றும் மனஅழுத்தத்திலிருந்து விடுபட்டு விரைவான நீதியை பெற்றனர். வழக்காடல் செலவில்லாமல் தீர்வு கிடைத்தது ஏழை, எளிய மக்களுக்கு பெரும் ஆதரவாக அமைந்தது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் சங்கராபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆ.தனசேகரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.பி. பர்வத ராஜ் ஆறுமுகம் , நீதித்துறை நடுவர் எ. ஆதியான் ஆகியோர் வழக்குகளை திறம்பட சமரசமாக முடித்து வைத்தனர். சங்கராபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் எஸ்.வி.என். ரவி, செயலாளர் என்.ராமசாமி, அரசு வழக்கறிஞர்கள் ரமேஷ் குமார், அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர்.
ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்வு காணப்பட்டதுடன், பணப்பிரச்சினைகளுடன் மட்டுமல்ல குடும்ப உறவுகளும் மீண்டும் இணைந்த இந்த மக்கள் நீதிமன்றம், நீதித்துறையின் சமூகப் பொறுப்பையும், மக்கள் மன்றத்தின் அவசியத்தையும் வலியுறுத்துவதாக அமைந்தது.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.