*குழந்தைகள் இருதய நோய் குறித்த விழிப்புணர்வாக நடைபெற்ற இதில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!
கோவையில்-டிச.08
செயல்பட்டு வரும் முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் பல்வேறு வகையான நோய்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் வருடா வருடம் கேஎம்சிஹெச் “கோவை மாரத்தான் எனும் மாரத்தான் நிகழ்ச்சியை நடத்திவருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து 29-ம் ஆண்டாக குழந்தைகள் இருதய நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் சூலூர் கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகம் முன்பாக நடைபெற்றது..
கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இதன் துவக்க நிகழ்ச்சியில்,கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாரத்தானை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான் கேஎம்சிஹெச் சூலூர் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் துவங்கி இந்த மாரத்தான் அவினாசி ரோடு கேஎம்சிஹெச் பிரதான மருத்துவ மையத்தில் நிறைவடைந்தது.
இதில் மருத்துவர்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள், செவிலியர்கள், மாணவர்கள், உட்பட சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக துவக்க விழாவில் பேசிய கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கோவையில் கேஎம்சிஹெச் சார்பாக முதல் மாராத்தான் 1991-ல் நடைபெற்றது.
பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற மாரத்தான்கள் நடத்துகிறோம். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இருதய நோய்கள் முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த வருட நிகழ்ச்சி யின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில்,
கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி உட்பட மருத்துவமனை நிர்வாகிகள்,மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
விழா நிறைவில் மாராத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்