June 19, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கொங்குநாடு திராவிட கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழா…

ஈரோடு கவுந்தப்பாடியில் நடைபெற்ற விழாவில் தலைவர் ஏ ஜி பாட்டன் சக்திவேல் திறந்து வைத்தார்..

ஈரோடு. ஜூன். 11

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் கொங்குநாடு திராவிட கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை அக்கட்சியின் தலைவர் ஏ ஜி பாட்டன் சக்திவேல் திறந்து வைத்தார்.

கொங்கு நாடு திராவிட கட்சி என்ற அரசியல் கட்சி ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. இக்கட்சி பொதுமக்களுக்கான மற்றும் பட்டியல் என மக்களுக்கான பிரச்சினைகள் குறித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி அரசு அதிகாரிகள் மூலம் தீர்வு காணப்பட்டது.

குறிப்பாக ஜாதியை வன்கொடுமை, கந்து வட்டி கொடுமை உள்ளிட்ட பட்டியல் இன மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக கொங்குநாடு திராவிட கட்சி முன்னின்று செயல்பட்டு வருகிறது.

இந்த கொங்குநாடு திராவிட கட்சியின் மாநில நிர்வாக தலைவராக ஏ ஜி பாட்டன் சக்திவேல் இருந்து வருகிறார். மாநில, மாவட்ட, ஒன்றிய, நகரம் மற்றும் ஊர் கிளைகள் அமைக்கப்பட்டு ஒரு அமைப்பு ரீதியான கட்டமைப்பை கொண்டு இந்த கொங்குநாடு திராவிட கட்சி செயல்பட்டு வருகிறது.

இக்கட்சிக்கு ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் ஏற்கனவே அலுவலகம் இருந்து வந்த நிலையில், தற்போது புதியதாக கவுந்தப்பாடி சிறுவலூர் ரோட்டில் கண்ணாடி புதூர் என்ற இடத்தில் மாநில தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த திறப்பு விழாவிற்கு தலைமை தாங்கி அலுவலகத்தை திறந்து வைத்து, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதையும் செலுத்தப்பட்டது.

பின்னர் பொதுமக்கள் பிரச்சனைகளுக்கான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மூத்த வழக்கறிஞர்கள் சென்னியப்பன், சூர்யா பூபாலன், மணிகண்டன், பொதுச்செயலாளர் இளவரசன் மாரிசாமி, மாநில துணைத்தலைவர் விஜய் லோகநாதன், மாநில செயலாளர் பொன்னுசாமி, ஈரோடு மாவட்ட செயலாளர் முத்துசாமி மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கிளை செயலாளர், நிர்வாகிகள், மகளிர் அணியை சேர்ந்த பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.