February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் இரண்டாம் வகுப்பு குழந்தை பள்ளியில் விளையாடும் போது பாம்பு கடித்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி.

சங்கராபுரம் டிச 18

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அதே கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகள் நவிதா இரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் பள்ளியில் விளையாடிக்கொண்டிருக்கும் போது பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது,
இதனை அடுத்து அங்கிருந்த
சகஆசிரியர்கள் குழந்தையை உடனடியாக சோழம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
சேர்த்தனர் அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை நவிதாக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

Facebook
YouTube
Instagram
WhatsApp