July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.12.2025அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல்.

கள்ளக்குறிச்சி டிச 18

தனியார்துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான ”வேலைவாய்ப்பு முகாம்” கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. வருகின்ற 19.12.2025 வெள்ளிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும். இவ்வேலைவாய்ப்பு முகாமில் தமிழகத்தை சார்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு சில்லரை விற்பனை துறையை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான தேவையான பணியிடங்களை நிரப்ப உள்ளனர். இது ஒரு இலவசப்பணியே ஆகும்.

இம்முகாமிற்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ / பி.டெக், முடித்த ஆண், பெண் ஆகியோர் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் CANDIDATE LOGIN வழியாக தங்களை பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம். இதன்
மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு
ரத்து செய்யப்படமாட்டாது.

எனவே தகுதியும் விருப்பும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார்த்துறை நிறுவனங்களும் வருகின்ற 19.12.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம்
1.00 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.