கள்ளக்குறிச்சி பிப் 05
கள்ளக்குறிச்சி புறநகர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பிறகு, புதிய வழித்தடத்திலான அரசு பேருந்தை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சியில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அதிவிரைவு பேருந்துகள், சொகுசு பேருந்துகள் இயக்கப்படும் என புறநகர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புறவழிச் சாலையில் 5.47 ஏக்கர் நிலத்தில் 16 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி பணி தொடங்கப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இன்று தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்த கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சிவசங்கர்
கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பகுதிகளுக்கு பேருந்து சென்றடையும். கள்ளக்குறிச்சியில் இருந்து கோவை, திருப்பூர், சேலம், சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு மக்கள் ஏதுவாக செல்லும் வகையில் விரைவு பேருந்து, குளிர்சாதன பேருந்து, டீலக்ஸ் பேருந்து ஆகியவை இயக்கப்படும்” என தெரிவித்தார்.
அதேபோல கல்வராயன்மலையில் புதிய போக்குவரத்து பணிமனை விரைந்து முடிக்கபட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும். அதன் பிறகு அனைத்து மலைக்கிராமங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும், மகளிர் இலவச பேருந்துகளும் இயக்கப்படும் எனப் பேட்டியளித்தார்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..