லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் சார்லஸ் மார்ட்டின் பேச்சு
புதுச்சேரி, டிச.22–
புதுவை லட்சிய ஜனநாயக கட்சி சார்பில், காமராஜ் நகர் தொகுதியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கும் விழா, ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் சார்லஸ் மார்ட்டின் கலந்து கொண்டு, தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கான ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது மாணவர்களிடையே அவர் பேசியதாவது:–
”கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சர் ஜான்குமார் இந்த நிகழ்வைச் செய்து வருகிறார். உலகில் நீங்கள் எங்கு சென்றாலும், எந்த உயரத்திற்குச் சென்றாலும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும். நீங்கள் அனைவரும் வாழ்வில் முன்னேறி நல்ல நிலைக்கு வர வேண்டும்.
நமது தேசத்தின் முதுகெலும்பு கல்வி தான். அந்தக் கல்விக்கு உதவுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை நான் என் முக்கிய கடமையாகக் கருதுகிறேன். இந்தப் பணி ஆண்டுதோறும் தொடரும்.
மேலும் ஒழுங்கு, சுத்தம், தரமான கல்வி மற்றும் வளர்ச்சியுடன் கூடிய புதுவையை, சிங்கப்பூரைப் போல ஒரு முன்னேறிய நகரமாக மாற்றுவதே எனது லட்சியம்.”
இவ்வாறு அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து, அரியாங்குப்பம், நெல்லித்தோப்பு மற்றும் காமராஜ் நகர் தொகுதிகளைச் சேர்ந்த லட்சிய ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்