செங்கோட்டையனை முற்றுகையிட்டுதவெகவினர் கடும் வாக்குவாதம்..
பல மாவட்டங்களில் கட்சியினர் இடையே கருத்து வேறுபாட்டால் தலைமை அதிர்ச்சி..
ஈரோடு. ஜன. 03
தமிழக வெற்றி கழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கோஷ்டி மோதல்கள் நடப்பதால் அக்கட்சியின் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
திரைப்பட நடிகர் விஜய் புதியதாக தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் அக்கட்சியின் மாநாட்டை நடத்தினார். அதன் பின்னர் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் மக்களை சந்தித்து தனது அரசியல் நிலைப்பாட்டை குறித்து பேசி வந்தார்.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், அங்கு வந்திருந்த பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அரசியலில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த துயர சம்பவம் நடைபெற்ற பிறகு விஜய் சுமார் 75 நாட்கள் எந்த ஒரு அரசியல் நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் தனது வீட்டில் இருந்து வந்தார்.
கரூர் துயர சம்பவம் நடைபெற்ற பிறகு அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தை அணுகி அதன் பிறகு தற்போது அரசியல் களத்தில் கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து வருகின்றனர்.
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு புதுச்சேரியில் ஒரு நிகழ்ச்சியிலும் அதன் பிறகு தமிழ்நாட்டில் முதல்முறையாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்திலும் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிலையில் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலுக்குரிய பணிகளை விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் கே எஸ் செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். அவருக்கு அந்தக் கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக பதவி வழங்கப்பட்டது.
தொடர்ந்து செங்கோட்டையினும் அவரது சொந்த மாவட்டமான ஈரோட்டிலும் மேற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களிலும் கட்சியின் பணிகளை செங்கோட்டையன் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல்வேறு விதங்களில் அவர்கள் உட்கட்சி பிரச்சனையின் காரணமாக கோஷ்டி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், திருச்சி மாவட்டம் ஈரோடு, கரூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு இடையே பதவி சண்டை ஏற்பட்டு அதன் காரணமாக கோஷ்டி சண்டையில் அவர்கள் ஈடுபட்டு வருவது தமிழக வெற்றி கழகத்தின் தலைமைக்கு பெரும் தலைவலியாக உள்ளதோடு, தேர்தல் நேரத்தில் தங்களின் சொந்தக் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலால் அந்தக் கட்சியின் தலைமை அதிர்ச்சியில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகர தமிழக வெற்றிக்கழக கட்சியின் அலுவலக திறப்பு விழாவிற்கு, வருகை தந்திருந்த அக்கட்சிய எண் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை வெள்ளகோவில் பகுதி கட்சியினர் இரண்டு கோஷிகளாக சந்தித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு இரண்டு கோஷ்டிகளும் வாக்குவாதம் சண்டை கைகலப்பு என இறங்கியது பெரும் அதிர்ச்சியை பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியது.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் உள்ளவர்களுக்கு பதவி தராமல் புதியதாக கட்சிக்கு வந்தவர்களுக்கு பதவிகள் வழங்கப்படுவதாக நீண்ட காலமாக விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த செங்கோட்டையன் கட்சியின் அலுவலகம் திறப்பு விழாவிற்கு பின்பு அங்கு வைத்து இது குறித்து பேசிக் கொள்ளலாம் என அந்த இடத்தில் இருந்து அவர் நைசாக கிளம்பி அலுவலக திறப்பு விழாவிற்கு சென்றுவிட்டார்.
இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு நிர்வாகிகள் மத்தியில் கட்சிப் பதவிக்காக கோஷ்டி சண்டை நடைபெறுவது தமிழக வெற்றிக் கழக தலைமைக்கு பெரும் தலைவலியாகவும், அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் உள்ளது

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.