February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோட்டின் புதிய அடையாளம்…

மாநகரம் வளர்ச்சி பெற__ மக்கள் மகிழ்ச்சி பெற..

ஈரோடு டெக்ஸ் வேலியில் பார்ச்சூன் சிட்டி உதயம்..

ஈரோடு. பிப். 25

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே டெக்ஸ்வேலி வளாகத்தில் புதிய பிரமாண்டமான ஹைடெக் வணிக வளாகம் விரைவில் அமைய உள்ளது.

ஈரோடு மாவட்டம் சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் கங்காபுரம் என்ற இடத்தில், டெக்ஸ்வேலி என்ற பிரமாண்டமான தனியாருக்கு சொந்தமான ஜவுளி பூங்கா இயங்கி வருகிறது.

இந்த டெக்ஸ்வேலி கடந்த 12 ஆண்டுகளாக பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டெக்ஸ்வேலி வளாகத்தில் 42 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்டமான, டைட்டில் பார்க்குடன் சர்வதேச வசதிகளுடன் அமைய உள்ள மிகப் பிரமாண்டமான ஷாப்பிங் சிட்டி உருவாக உள்ளது.

இந்தப் பிரமாண்டமான ஷாப்பிங் சிட்டி அமைய உள்ளது குறித்து நேற்று டெக்ஸ்வேலி வளாகத்தில், தாகத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், நிர்வாக தலைவர் லோட்டஸ் பெரியசாமி, துணைத் தலைவர் தேவராஜன், நிர்வாக இயக்குனர் குமார் மற்றும் இணை இயக்குனர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்பொழுது நிர்வாக இயக்குனர் குமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது,

ஈரோட்டின் பிரம்மாண்டமான அடையாளமாக 227 அடி உயரம் கொண்ட முருகர் சிலை திண்டல்மலை கோவிலில் அமைக்கப்பட்ட கும்பாபிஷேகம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதுபோன்ற மற்றொரு அடையாளமாக டெக்ஸ்வேலி செட்டி வளாகத்தில், உலக தரத்துடன் கூடிய அதி நவீன வசதிகள் கொண்ட பிரமாண்டமான ஷாப்பிங் மஹால் அமைக்கப்பட உள்ளது. இது ஈரோடு மாநகரம் மட்டுமல்லாமல், கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் மேற்கு மண்டலத்தின் ஒரு அடையாளமாகவும் விளங்கும்.

ஈரோட்டின் புதிய பிரம்மாண்டத்தின் உச்சி என்று அழைக்கும் அளவிற்கு உருவாக்கப்பட உள்ள ஷாப்பிங் மஹால் இன்னும் சில தினங்களில் பணிகள் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டு, ஈரோட்டின் பேரும் புகழும் உலக அளவில் எடுத்துச் செல்லப்படும்.. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய நிர்வாகத்தின் துணைத் தலைவர் தேவராஜன் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது,

மகிழ்ச்சியான, மகத்தான ஈரோட்டை உருவாக்க அண்ணா அனைவரும் இங்கு ஒன்று கூடி கரம் கோர்த்துள்ளோம்.

என்ன வளம் இல்லை இந்த ஈரோட்டில், இருப்பினும் எந்த ஒரு முக்கிய தேவைக்காக, குறிப்பாக வேலை வாய்ப்பு, படிப்பு, ஜவுளி மற்றும் தங்க நகைகள் வாங்க. அதேபோல் மருத்துவ சிகிச்சைக்காக கோவை செய்கின்றோம். ஈரோட்டில் 1500 டாக்டர்களும், 400 ஆடிட்டர்களும் தரமானவர்களாக இருந்தும் நாம் வெளியூருக்கு தான் செல்கின்றோம்.

கொங்கு மண்டலத்தில் ஈரோடு ஒரு அற்புதமான மாவட்டம் ஆனால் இங்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும், அமைப்புகளும் பெரிய அளவிலான வளர்ச்சிகளும் இல்லாமல் ஒரு குறுகிய சிறு மாவட்டமாகவே இருக்கின்றது.

வெளி மாநிலங்களுக்கு சென்று ஈரோட்டை சேர்ந்தவன் என்று சொன்னால் அவர்களுக்கு தெரியவில்லை. கோயம்புத்தூருக்கு அருகில் உள்ளது. ஊருக்கு அருகில் உள்ளது என்று சொன்னால் தான் புரிகிறது. ஈரோட்டுக்கு என்று ஒரு தனி அடையாளம் இருக்க வேண்டும்.

அந்த அடையாளத்தை உலகமெங்கும் தரக்கூடியது தான் இந்த டெக்ஸ்வேலி வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட உள்ள உலக தரத்துடன் கூடிய பிரம்மாண்டமான ஷாப்பிங் செட்டியாகும்.

மேலும் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள இந்த டைட்டில் பார்க் கட்டும் பணி விரைவில் தொடங்கும். கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பிரம்மாண்டமான திறப்பு விழா செய்யப்படும்.

மேலும் ஈரோட்டிற்கு என்று ஒரு தொழில் நகரம் இருந்தாலும் எங்கே விமான நிலையம் இல்லாதது மிகப்பெரிய ஒரு குறைபாடு. ரயிலில் வரும் சரக்குகள் கூட ஈரோட்டில் இறக்கி வைக்க இடம் இல்லாமல் ஈரோட்டிற்கு அருகில் உள்ள ஈங்கூர் பகுதி ரயில் நிலையத்தில் தான் தற்போது இறக்கி வைக்கப்படும் ஒரு சூழ்நிலை உள்ளது.

எந்த ஒரு பண பரிவர்த்தை ஆனாலும் அது முறையாக வங்கிக் கணக்குகள் மூலமாகவே செலுத்தப்பட்டு வருகிறது. தனிப்பட்ட முறையில் நேரடியாக பணத்தை கொடுத்து வாங்குவது இல்லை. காரணம் நம்முடைய தொழில் நேர்மையாகவும் நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும் முறையாக அனைத்து வரிகளையும் சரியாக செய்திருக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் எங்களுக்கு உள்ளது.

அதேபோல் ஒரு சிறப்பான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஈரோட்டில் இல்லை என்பதும் வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாக உள்ளது.

தொடர்ந்து எங்களுடைய பல்வேறு முயற்சிகளுக்கு இடையே டெக்ஸ்வேலி வளாகத்தில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மாலில் பல சிறப்பு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளது.

அதில் சிலவற்றை தற்போது உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

ஈரோட்டில் வருகின்ற பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி காலை 11:00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு தளங்கள் கொண்ட டைட்டில் பார்க் கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைக்க உள்ளார்.

இந்த டைட்டில் பார்க்குடன் சர்வதேச தரத்தில் சகல வசதிகளுடன் அமையும் ஷாப்பிங் சிட்டி. இதனைத் தொடர்ந்து ஈரோட்டில் உருவாகும் மிகப் பிரமாண்டமான ஃபார்ச்சூன் சிட்டி.

நமது டெக்ஸ்வேலி சிட்டி தான் இனி பார்ச்சூன் செட்டியாக உருவாகிறது.

இனி வரும் காலத்தில் டெக்ஸ்வேலி பார்ச்சூன் சிட்டியாக இயங்கப் போகிறது.

மேலும் இங்கே டைட்டில் பார்க் மட்டுமின்றி மாபெரும் ஷாப்பிங் சந்தையை உருவாக்க உள்ளது.

இங்கு அமைய உள்ள ஷாப்பிங் மாலில் முன்னணி உணவகங்களின் ரெஸ்டாரண்டுகள், புட்போர்ட்டுகள் ஒரே நேரத்தில் 120 கார்கள் சார்ஜிங் செய்யும் வசதியும், வந்து விரிந்த சார்ஜிங் சாசனம் அமைய உள்ளது.

மேலும் இங்கு திரையரங்குகள் குழந்தைகள் விளையாடும் மகிழும் மெகா கேம்ப் ஜோன், வெயிட்டிங் அண்ட் மீட்டிங் கால்கள் கார்ப்பரேட் அலுவலகங்கள் இங்கு அமைய உள்ளது.

இந்த பார்ச்சூன் சிட்டி மேற்கு தமிழ் நாட்டை மேலை நாடுகளுக்கு இணையாக உருவாக்குவதே பார்ச்சூன் சிட்டியின் நோக்கம் ஆகும்.

இவ்வாறு ஃபார்ச்சூன் சிட்டி நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp