210 மனுக்கள் வரப்பெற்ற நிலையில் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கல்…
ஈரோடு. டிச. 30

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேல் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை, கருணை அடிப்படையிலான அரசு வேலை, இலவச வீட்டு மனை கோருதல், வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பித்தல் மற்றும் காவல்துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் வழங்கப்பட்டது.
இதில் 210 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் அந்த மனுக்கள் மீது மேல் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தாட்கோ சார்பில் இரண்டு நபர்களின் இயற்கை மரணத்தின் அடிப்படையில் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இதுபோன்று பல்வேறு நல திட்ட உதவிகளை ஆட்சியர் ச. கந்தசாமி வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.